மீண்டும் வேகமெடுக்க தொடங்கிய கொரோனா...! தினசரி பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் தினசரி கொரோனாபாதிப்பு 8 ஆயிரத்தை கடந்துள்ளது.

மீண்டும் வேகமெடுக்க தொடங்கிய கொரோனா...! தினசரி பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதில் நேற்று மட்டும் 8 ஆயிரத்து 329 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் தீவிர தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். 4 ஆயிரத்து 216 பேர் தொற்று பாதிப்பு நீங்கி, மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும், தொற்று பாதிப்புக்கு 40 ஆயிரத்து 370 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்பு விகிதம் 1 புள்ளி 21 சதவீதமாகவும், குணமடைவோர் விகிதம் 98 புள்ளி 96 சதவீதமாகவும், பாதிப்பு விகிதம் 0 புள்ளி 09 சதவீதமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் நேற்று வரை 194 கோடியே, 92 லட்சத்து 74 ஆயிரத்து 111 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாகவும், இதில் நேற்று மட்டும் 15 லட்சத்து 8 ஆயிரத்து 406 தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.