18 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் வரும் நவம்பர் இரண்டாம் பாதியில் தொடங்கும்...

இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், வரும் நவம்பர் இரண்டாம் பாதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

18 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் வரும் நவம்பர் இரண்டாம் பாதியில் தொடங்கும்...

நாட்டில் கொரோனா 2-ஆம் அலை குறைந்தாலும், 3-ஆவது அலை குறித்த அச்சம் இருந்து வருகிறது. கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்பதால், தடுப்பூசி செலுத்துவதை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. பொதுமக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொள்கின் றனர். இந்த நிலையில், 2 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, பாரத் பயோடெக்கின் ’கோவாக்ஸின்’ தடுப்பூசி செலுத்துவதற்கு, மருந்து கட்டுப்பாட்டுக் குழுவின் கீழ் உள்ள கொரோனா நிபுணர் குழு,  ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் நாள்பட்ட அல்லது கடுமையான உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்பெறுவர் என்றும், நோய்களின் முன்னுரிமை பட்டியல் தயாராக 3 வாரங்கள் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த பரிந்துரையை இந்திய மருந்து கட்டுப்பாட்டு குழு, மதிப்பாய்வு செய்து ஒப்புதல் அளித்தவுடன், தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கோவாக்சின் ஒதுக்கீடு செய்வதில், சரியான சமநிலையை ஏற்படுத்திய பிறகு, நவம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முதல் மற்றும் இரண்டாவது தவணைக்கு இடையில், 28 நாட்கள் இடைவெளி கொடுக்கப்படும் என்றும், பெரியவர் களுக்கு வழங்குவதைப் போலவே குழந்தைகளுக்கும் 0 புள்ளி 5 மில்லி லிட்டர் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.