கால்நடை வழக்கில் தந்தையை தொடர்ந்து மகளிடம் விசாரணையை தொடங்கிய அமலாக்க துறை...!!!

கால்நடை வழக்கில் தந்தையை தொடர்ந்து மகளிடம் விசாரணையை தொடங்கிய அமலாக்க துறை...!!!

டெல்லியில் உள்ள அமலாக்க துறையின் அலுவலகத்திற்கு சுகன்யா மண்டல் சென்றடைந்தார்.  அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கால்நடைகள் கடத்தல் வழக்கு:

மேற்கு வங்காளத்தில் கால்நடைகள் கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அனுப்ரதா மண்டல் மீது அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.  இன்று அனுப்ரதா மண்டலின் மகள் சுகன்யாவை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்துள்ளது.  

மேலும் தெரிந்துகொள்க:  கால்நடை வழக்கில் சிறை சென்ற அனுப்ரதா மண்டல்..!!!

இன்று காலை டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகத்திற்கு வந்த சுகன்யாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கால்நடைகள் மூலமும் ஊழலா?:

கால்நடைகள் கடத்தல் வழக்கில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.  இந்த வழக்கில் அனுப்ரதா மண்டலின் பாதுகாவலர் அஹ்கல் ஹுசைனை ஏழு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அதே நேரத்தில், கால்நடைகள் கடத்தல் வழக்கை சிபிஐயும் தனியாக விசாரித்து வருகிறது.  

நீதிமன்ற காவல்:

விலங்குகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அனுப்ரதா மண்டல் நவம்பர் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  நீதிமன்ற காவல் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.  அக்டோபர் 11 ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் மண்டலை அவரது போல்பூர் இல்லத்தில் இருந்து கைது செய்தனர். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:    விரைவாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய ரியல் ஹீரோஸ்..!!!