விற்க முடியாத விரக்தியில் நெல்லுக்கு தீ வைத்த விவசாயி - வீடியோ வெளியிட்ட பா.ஜ.க. எம்.பி

விற்க முடியாத விரக்தியில் நெல்லுக்கு தீ வைத்த விவசாயி - வீடியோ வெளியிட்ட பா.ஜ.க. எம்.பி

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமோத் சிங் என்ற விவசாயி, தமது நெற்பயிரை விற்பதற்காக கடந்த 15 நாட்களாக ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களாக ஏறி இறங்கி உள்ளார்.

ஆனால் விற்க முடியாததால் விரக்தியடைந்த அவர், சொந்த வயலோடு சேர்த்து நெல்லை தீ வைத்து கொளுத்தி உள்ளார்.

இந்த வீடியோவை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி, இந்த அமைப்பு விவசாயிகளை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது? என்றும், வேளாண் கொள்கையை மறுபரிசீலனை செய்வதே இந்த தருணத்தின் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு விவசாயி தமது சொந்த பயிர்களுக்கு தீ வைப்பதை விட பெரிய தண்டனை எதுவும் இல்லை என கூறியுள்ள வருண் காந்தி, நமக்கு உணவளிப்பவர்களை நம்மால் பாதுகாக்க முடியாவிட்டால், அது நாட்டில் உள்ள அனைவரின் தோல்வியாகும் என வருத்தம் தெரிவித்துள்ளார்.