
வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் முன்னேற்றத்தில் இந்தியா முன்னணியில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்புத் திருவிழாவின் ஒரு பகுதியாக சுமார் 71 ஆயிரம் பேருக்கு காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று பணிநியமன ஆணைகளை வழங்கியுள்ளார். அதன்படி ஆசிரியர்கள், மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் என புதிய ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடிய பின் பேசிய பிரதமர் மோடி, ஆட்சேர்ப்பு செயல்முறைகள், நெறிப்படுத்தப்படுத்தப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வணிக உலகில் நுகர்வோர் எப்போதும் சரியானவர் என சொல்லப்படுவதுபோல், குடிமகன் எப்போதும் சரியானவர் என்பதே ஆட்சியின் குறிக்கோள் எனவும் அவர் கூறியுள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: தகவல் அளித்தால் 5 லட்சம் பரிசு.....எதைக் குறித்து?!!