சிங்கம் சிங்கிளா தான் வரும்.. யானையை விரட்டி மாஸ் காட்டிய வனக்காவலர்!! வீடியோ

ஒடிசாவில், ஒற்றை யானையை தனி ஆளாக நின்று விரட்டிய வனக்காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

சிங்கம் சிங்கிளா தான் வரும்.. யானையை விரட்டி மாஸ் காட்டிய வனக்காவலர்!! வீடியோ

ஒடிசா மாநிலத்தின், ரெதாகோல் வனப் பிரிவுக்குட்பட்ட சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சட்சாடி மற்றும் அங்கபிரா கிராமங்களுக்குள் கடந்த செவ்வாய்கிழமை அன்று ஒற்றை யானை ஒன்று புகுந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அந்த யானை பயிர்களை நாசம் செய்ய தொடங்கியுள்ளது.

அப்போது அங்கு வந்த வனக் காவலர் சித்த ரஞ்சன் மிரி அந்த ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றுள்ளார். அவருடன் இருந்த அனைவரும் யானையை பார்த்ததும் ஓடிவிட்டாலும், அவர் தனி ஆளாக நின்று யானையை விரட்டுவதிலையே கவனம் செலுத்தினார். அதன் பின், தீ பந்தத்தை காட்டி யானையை காட்டுக்குள் விரட்டி மக்களுக்கு பாதுகாப்பு அளித்தார்.

இது குறித்து அந்த வனக்காவலர் கூறுகையில், நாங்கள் யானையை விரட்டுவதற்கு பயிற்சி பெற்றுள்ளோம்.. யானை நெருப்புக்கு பயப்படும்.. அது என்னை நோக்கி வந்ததும் நான் தீ பந்தத்தை காட்டினேன். அதனால் தான் அந்த யானை உடனே நின்றது. இல்லையென்றால் அந்த யானை என்ன மிதித்திருக்க முடியும்” என்றார்.