டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவ மழை கொட்டி தீர்த்த கனமழை...

டெல்லியில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவ மழை கொட்டி தீர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவ மழை கொட்டி தீர்த்த கனமழை...

டெல்லியில் கடந்த ஜுலை மாதம் தொடங்கிய பருவமழையானது அந்நகரையே புரட்டி போட்டு வருகிறது. சில நாட்கள் தீவிரமாக கொட்டித்தீர்க்கும் மழை, சில நாட்கள் ஓய்வெடுத்து பின் மீண்டும் வெளுத்து வாங்குவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இன்று காலை முதல் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் இந்திரா காந்தி விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. விமான நிலைய ஓடு பாதையிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 4 உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு சர்வதேச விமானம் ஆகியவை  ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகனங்கள் அனைத்து தண்ணீரில் மிதந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.மோதி பாக், ஆர்.கே.புரம் போன்ற பகுதிகளில் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளன. இதனிடையே டெல்லியில் கடந்த 46 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் பருவமழை கொட்டி தீர்த்துள்ளதாக கூறப்படுகிறது.