டிராக்டரை திருடி சென்ற மர்ம நபர்...! சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் வலைவீச்சு...!

புதுச்சேரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய டிராக்டரை திருடி சென்ற மர்ம நபரை, சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலிசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி புறநகர கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவர் செங்கல் சூலைகளில் தயாராகும் செங்கல்களை தனது டிராக்டரில் எடுத்து கொண்டு அருகில் உள்ள கிராமங்களுக்கு வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் நேற்று முந்தினம் இரவு, தனது புது டிராக்டரை  கரிக்கலாம்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள அவரது வீட்டின் வெளியே நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் காலை வந்து பார்த்த போது தனது டிராக்டர் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர், கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலிசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் கரிக்கலாம்பாக்கத்தில் இருந்து செளஞ்சேரி சாலை வழியாக டிராக்டரை ஓட்டி செல்வதும், அதை ஓட்டி செல்லும் மர்ம நபர், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்ததும் தனது தலையை மறைத்து செல்லவதும் கேமிராவில் பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலிசார் மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.