சபரிமலையில் அமையவுள்ள புதிய விமான நிலையம்...!

சபரிமலையில் அமையவுள்ள புதிய விமான நிலையம்...!
Published on
Updated on
1 min read

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்துள்ளதாக கேரள அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக விமான நிலையம் அமைத்துத்தரக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், சபரிமலையில்  புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்துள்ளதாக கேரள அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த வகையில், எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டில் உள்ள 2,570 ஏக்கரில் சபரிமலை விமான நிலையம் அமைக்கப்பட உள்ள நிலையில் செருவேலி எஸ்டேட் பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளதால் நிலம் கையகப்படுத்துவதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செருவேலி எஸ்டேட் பகுதிக்கு அருகில் உள்ள 307 ஏக்கர் நிலமும் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுபற்றி கடந்த 2017 ஆம் ஆண்டு சபரிமலை வரும் பக்தர்களின் வசதிக்காக புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என கேரள அரசு அறிவித்திருந்தது. அதன் படி, 2018 ஆம் ஆண்டு சர்வதேச டெண்டர் கோரப்பட்டு ஆய்வு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் தற்போது நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

-- சுஜிதா ஜோதி  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com