யார பத்திடா தப்பா போடுற.. தாறுமாறாக தாக்குதலில் ஈடுபட்ட நபர்.. வைரலாகும் வீடியோ!!

யார பத்திடா தப்பா போடுற.. தாறுமாறாக தாக்குதலில் ஈடுபட்ட நபர்.. வைரலாகும் வீடியோ!!

சமூக வலைத்தளத்தில் தன்னை அவமானப்படுத்தியாக கூறி இளைஞர் ஒருவரை கொடூர தாக்கும் காட்சிகள் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளம் என்பது இன்றைய காலத்தில் அனைவரின் கைக்குள் அடங்குவது.. தன்னை பிரபலப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் கையை எடுக்கும் முதல் ஆயுதம் சமூக வலைத்தளம் தான்.

சம்பவம்

அந்த வகையில், கேரள மாநிலம் கொல்லம், பூயப்பள்ளி பகுதியை சார்ந்தவர் ராகுல் என்பவர். கடந்த திங்கள் கிழமை வள்ளிக்குந்நம் பகுதியை சார்ந்த அச்சு என்ற இளைஞரை நேரில் வரவழைத்து.. தன்னை சமூக வலைதளங்களில் அவமானப்படுத்தியதாக கூறி முதலில் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்க மிரட்டியுள்ளார்.

கொடூர தாக்குதல்

பிறகு, குனிந்த படி மன்னிப்பு கேட்க சென்ற இளைஞரை(அச்சு) ராகுல் கண்மூடித்தனமாக காலால் உதைத்து தாக்கியுள்ளார். இந்த காட்சிகளை ராகுலின் நண்பர்கள் ஒரு சிலர் செல்போன்களில் பதிவு செய்து இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அதிரடி கைது

இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து தாக்குதல் வீடியோவை கண்ட கொல்லம், கருநாகப்பள்ளி போலீசார் ராகுல் என்பவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். கொலை வழக்கு ,பலாத்கார வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கிய குற்றவாளி ராகுல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ

தாக்குதலுக்கு உள்ளான அச்சு கொல்லம் தனியார் மருத்துவமனையில் ஒன்றின் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதல் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.