பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...!

விமானத்தின் மீது பறவை மோதிய எஞ்சின் செயலிழந்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...!
Published on
Updated on
1 min read

அசாம் மாநில கவுஹாத்தியில் இருந்து 185 பயணிகளுடன் டெல்லி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பறவை மோதி எஞ்சின் செயலிழந்ததால் விமானமானது அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தரையில் இருந்து கிட்டதட்ட ஆயிரத்து 600 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில் விமானத்தின் இறக்கை பகுதியில் பறவை  மோதியதை தொடர்ந்து மின்விசிறி பிளேடுகள் சேதமடைந்தன. இதனால் விமானத்தின் வால் பகுதியில் தீ பற்றியுள்ளது.

இதை கண்ட விமான நிலைய ஊழியர்கள் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க, உடனடியாக விமானிகளுக்கு  எச்சரிக்கை அனுப்பப்பட்டு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com