அதிரடி சோதனையால் போலீசாருக்கும் நிர்வாகத்தினருக்கும் தள்ளு முள்ளு.. புதுச்சேரியில் பெரும் பரபரப்பு!!

அதிரடி சோதனையால் போலீசாருக்கும் நிர்வாகத்தினருக்கும் தள்ளு முள்ளு..  புதுச்சேரியில் பெரும் பரபரப்பு!!

புதுச்சேரி பிராந்தியம் ஏனாமில் செயல்பட்டு வரும் சூதாட்ட கிளப்பிற்குல் போலீசார் நடத்திய அதிரடி சோதனையால் போலீசாருக்கும் நிர்வாகத்தினருக்கும் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் ஆந்திரா மாநிலம் கோதவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.. இங்கு சட்டவிரோதமாக 25 சூதாட்ட கிளப்புகள் நடைபெற்று வருவதாகவும் இதில் ஆந்திரா கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலை சேர்ந்த கோடீஸ்வரர்கள், தாதாகள் இந்த கிளப்புகளுக்கு தினந்தோறும் வந்து செல்வதால் நாள் ஒன்றுக்கு ரூ. 5 கோடி வரை பண புழக்கம் ஏற்பட்டு ஏனாமை அவர்கள் தங்களின் கட்டுபாட்டுக்குள் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், நேற்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஏனாம் சூதாட்ட கிளப்புகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்க்கு உடனடியாக சட்டவிரோதமாக இயங்கி வரும் சூதாட்ட கிளப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று ஏனாமில் சட்ட விரோதமாக இயங்கி வந்த ராயல் ரெக்ரியேஷன் சொசைட்டியை  ஏனாம் போலீசார் கடலோர கிராமங்களில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி செல்வது போல் சென்று தீடிரென கிளப்பிற்குள் நுழைந்தனர்.

அப்போது ரெக்கிரியேஷன் கிளப் நடத்துபவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். சிறிது நேரத்தில் கிளப் நடத்துபவர்களுக்கும் போலீசார்க்கும் தல்லு முல்லு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. மேலும் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.