உங்க கட்சியுடன் கூட்டணியா? வாய்ப்பே இல்ல... அதிரடி காட்டிய பிரபல கட்சி தலைவர்

மராட்டியத்தில் முதலமைச்சர்  பதவியை கூட்டணி கட்சிகளுக்கு பகிரும் பேச்சுக்கே இடமில்லை என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார்.

உங்க கட்சியுடன் கூட்டணியா? வாய்ப்பே இல்ல... அதிரடி காட்டிய பிரபல கட்சி தலைவர்

மராட்டியத்தில் முதலமைச்சர்  பதவியை கூட்டணி கட்சிகளுக்கு பகிரும் பேச்சுக்கே இடமில்லை என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார்.

மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதலமைச்சர் பதவிக்கு ஏற்பட்ட போட்டியின் காரணமாக பா.ஜக , சிவசேனா இடையே கூட்டணி முறிந்தது.இதையடுத்து சிவசேனா கொள்கை முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியது. இந்தநிலையில் சமீபத்தில் முதலமைச்சர்  உத்தவ் தாக்கரே, பிரதமர் நரேந்திர மோடி இடையேயான தனிப்பட்ட சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு கட்சிகளும் இணைந்து மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இருப்பினும் இது வழக்கமான சந்திப்பு தான் என சிவசேனா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலேயின் பேச்சு மீண்டும் கூட்டணி கட்சிக்குள் சல சலப்பை ஏற்படுத்தி உள்ளது.நானா படோலே கூறுகையில், 2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மாநிலத்தில் மிகப்பெரிய கட்சியாக இருக்கும் என்று கூறினார்.

மகாவிகாஸ் அகாடி ஆட்சியில் சிவசேனாவின் முதல்வர் பதவி 5 ஆண்டுகள் தொடரும். எங்கள் கட்சியை சேர்ந்தவரே அந்த பதவியை வகிப்பார் என்றும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.  இது உறுதியான நிலைப்பாடாகும். முதலமைச்சர்  பதவியை பகிர்ந்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்றும் நிட்டவட்டமாக அறிவிப்பு செய்துளாளர். காங்கிரஸ் தலைவர் நானா படோலே முதலமைச்சராக  ஆசைப்படுவதாக கூறி சமூக வலைதளத்தில் வீடியோ வேகமாக பரவி வருகிறது என கூறியுள்ள அவர்,  ஒருவர் முதலமைச்சர்  பதவிக்கு ஆசைப்படுவதில் எந்த தீங்கும் இல்லை என்றும்  அனைத்து கட்சிகளிலும் பல்வேறு உரிமை கோரல்கள் உள்ளன என கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் நாட்டை வழிநடத்தும் திறன் கொண்ட பல தலைவர்கள் உள்ளனர் என்றும் மகா விகாஸ் கூட்டணி கருத்தியல் ரீதியாக வேறுபாடு கொண்ட 3 கட்சிகளின் கூட்டணியாகும் என கூறியுள்ள அவர், தா ங்கள் ஒரு அரசை நடத்துவதற்காக ஒன்றிணைந்தோம். தற்போது அரசியல் அமைப்பால் ஒன்றிணைந்துள்ளோம் என்றும் கருத்து தெரிவித்துள்ள ராவத்,  இந்த கூட்டணியில் இருக்கும் 3 கட்சிகளும் தங்கள் கட்சியை விரிவுபடுத்துவதற்கும், அமைப்பை பலப்படுத்துவதற்கும் உரிமை உண்டு என தெரிவித்துள்ளர்.