மஹாராஷ்டிராவில் காய்கறி சந்தையில் ஒன்று கூடிய பொதுமக்கள்..!

தொற்று மேலும் பரவ வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கவலை..!

மஹாராஷ்டிராவில் காய்கறி சந்தையில் ஒன்று கூடிய பொதுமக்கள்..!

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள காய்கறி சந்தையில் மக்கள் அதிகளவில் குவிந்திருந்தது, தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலையோடு சேர்த்து ஒமிக்ரானும் அதிவேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 10,661 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வார இறுதிநாளான இன்று அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் தாதர் சந்தையில் அதிகளவில் கூடினர். கொரோனா காலகட்டத்தில் இவ்வாறு விதிகளை மீறி மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.