தேங்காய்க்கு பதிலாக சிதறிய புதிய தார்சாலை... திறப்பு விழாவில் பரபரப்பு சம்பவம்...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலை திறப்பு விழாவில் தேங்காய் உடைக்கப்பட்டபோது, தேங்காய்க்கு பதிலாக புதிய தார்சாலை சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேங்காய்க்கு பதிலாக சிதறிய புதிய தார்சாலை... திறப்பு விழாவில் பரபரப்பு சம்பவம்...

லக்னோ மாவட்டம் பிஜ்னூரில் 1 கோடியே 16 லட்ச ரூபாய் செலவில், 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார்சாலை புனரமைக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற திறப்பு விழாவில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. மவுசம் சவுத்ரி கலந்து கொண்டு, சடங்கு சம்பிரதாயபடி தேங்காய் உடைத்துள்ளார்.

அப்போது, தேங்காய்க்கு பதிலாக புதிய தார்சாலை, சிறு-சிறு துண்டுகளாக சிதறியது. இதனால் வருத்தம் அடைந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ., சாலையின் தரத்தை மண்வெட்டியால் சோதனை செய்தார். இதனையடுத்து, சாலை தரமற்று இருப்பதை கண்டறிந்த அவர், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.