அங்கிள்னு கூப்பிட்ட பெண்ணின் மண்டையை உடைத்த கடைக்காரன்..!!

பேட்மிட்டன் பேட்டை மாற்ற கடைக்குச் சென்ற இளம்பெண் அங்கிள் என அழைத்ததால் ஆத்திரத்தில் கடைக்காரர் இளம்பெண் மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

அங்கிள்னு கூப்பிட்ட பெண்ணின் மண்டையை உடைத்த கடைக்காரன்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உதம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான சிதர்கஞ்ச் நகரைச் சேர்ந்தவர் 18 வயதான நிஷா அகமது. சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வமுள்ள நிஷா பேட்மிட்டனில் தேசிய வீராங்கனை ஆகவேண்டும் என்ற முயற்சியில் தனது வீட்டருகே உள்ள மைதானத்தில் தீவிரமாக பயற்சி செய்வது வழக்கம். மகளின் ஆர்வத்தை பார்த்த பெற்றோர் அவருக்கு ஒரு நல்ல தரமான பேட்மிட்டன் பேட்டை வாங்கி பயற்சி செய்ய சொல்லி பணத்தை கொடுத்துள்ளனர்.

அந்த பணத்தை வாங்கிக்கொண்டு அருகிலுள்ள விளையாட்டு உபகரணங்கள் வாங்கும் கடைக்கு சென்று ஒரு  பேட்மிட்டன் பேட்டை வாங்கி வந்துள்ளார். ஆனால் கொடுத்த பணத்தை விட விலை மலிவான பேட்டை கடைக்காரன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதை வாங்கி வந்து இரண்டே நாட்களில் பேட்டில் உள்ள வலைகள் ஒவ்வொன்றாக கிழியத் தொடங்கியுள்ளது. எனவே அந்த பெண் வாங்கிய பேட்டை மாற்றுவதற்காக மீண்டும் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது கடையின் சொந்தக்காரரான மோஹித் குமார் என்பவர் கடையில் இருந்துள்ளார். அங்கு சென்ற நிஷா அகமது, 'இங்கு வாங்கி சென்ற பேட் விரைவில் உடைந்து விட்டது. இதனை வாங்கி கொண்டு என்னக்கு புது பேட்மிட்டன் பேட்டை கொடுங்கள் அங்கிள், இல்லையென்றால் இதை சரி செய்வது கொடுங்கள் அங்கிள்' என்று கேட்டுள்ளார். 

தன்னைவிட உயரமாக இருக்கும் பதினெட்டு வயது பெண் பார்ப்பதற்கு கல்லூரி இளைஞன் போல் இருக்கும் என்னை பார்த்து அண்ணா என்று அழைக்காமல் வார்த்தைக்கு வார்த்தை அங்கிள் என்று சொல்கிறாளே என்று ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மோஹித் குமார் நிஷாவை கீழே தள்ளி கொடூரமாக தாக்கி கடையை விட்டு வெளிய துரத்தியுள்ளார். தலையில் ரத்தகாயத்துடன் வெளியே கிடந்த நிஷாவை அங்குள்ள பொதுமக்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிஷாவிடம் நடந்ததை விசாரித்து குடும்பத்தினர் கடைக்காரன் மோஹித் குமார் மீது காவல் துறையில் புகார் அளித்தனர். நிஷா குடும்பத்தினர் அளித்த புகாரை விசாரித்த காவல்துறை 35 வயது மதிக்கத்தக்க மோஹித் குமார் மீது ஐபிசி பிரிவு 354 (ஒரு பெண்ணின் அடக்கத்தை சீற்றம் செய்தல்), பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) மற்றும் பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.