காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்துவிட்டு பாஜகவில் இணைந்த பெண்.. காரணம் என்ன..?

காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்துவிட்டு பாஜகவில் இணைந்த பெண்.. காரணம் என்ன..?

பெண்களை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் சார்பில் மேற்கொள்ளப்படும் பிரச்சார சுவரொட்டியில் இடம்பெற்றுள்ள பெண், பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

பெண்களை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் சார்பில் மேற்கொள்ளப்படும் பிரச்சார சுவரொட்டியில் இடம்பெற்றுள்ள பெண், பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெறவுள்ள உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளார். அதாவது பாஜகவால் உரிமை மறுக்கப்பட்ட பெண்களை தேர்ந்தெடுத்து வேட்பாளர்களாக களமிறக்கியிருப்பதன் மூலம் வெற்றிபெற்றுவிடலாம் என பிரியங்கா திட்டமிட்டுள்ளார்.

இதற்காக மொத்த இடங்களில் 40 சதவீதத்தை பெண்களுக்கு வழங்கியுள்ளார். இதனை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் ”நான் ஒரு பெண், என்னால் போராட முடியும்” என்ற வாசகம் அடங்கிய பிரச்சார சுவரொட்டி உத்தரபிரதேசத்தில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது.

இந்த விளம்பர சுவரொட்டியில் இடம்பெற்ற பெண் தற்போது பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் அப்பெண்ணுக்கு சீட் மறுக்கப்பட்டதால் இம்முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com