”உலகம் மாறிவிட்டது, சிபிஐயும் மாற வேண்டும்” உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!!!

”உலகம் மாறிவிட்டது, சிபிஐயும் மாற வேண்டும்” உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!!!

சிபிஐ கையேட்டைப் பார்த்ததாகவும், அதை புதுப்பிக்க வேண்டியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.  விசாரணையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை சிபிஐ கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் கருத்து:

உலகம் மாறிவிட்டது, சிபிஐயும் மாற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. த னிப்பட்ட டிஜிட்டல் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை பறிமுதல் செய்தல், ஆய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

விசாரணையின் போது:

நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்த விசாரணையின் போது, ​​மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், தனியுரிமை விவகாரத்தில் உலகம் முழுவதும் உள்ள புலனாய்வு அமைப்புகளின் கையேடுகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன என வாதாடினார்.

இதுகுறித்து நீதிபதி கவுல் கூறுகையில், ”உலகம் மாறிவிட்டது, சிபிஐயும் மாற வேண்டும்.” என்று கூறியுள்ளார்.  மேலும் நீதிபதி ஓகா கூறுகையில் “சிபிஐ கையேட்டைப் பார்த்தேன். அதை புதுப்பிக்க வேண்டும்” என்றார்.  

விசாரணையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை குறித்து சிபிஐ கையேடு குறிப்பிடுகிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   குஜராத் தேர்தலும்...மூன்று கட்சிகளும்...மூன்று விதமான உணர்வுகளும்....