கடல் அலையில் சிக்கி உயிரிழந்த இளைஞர்...! விசாரணை நடத்தி வரும் போலீசார்..!

புதுச்சேரியில் கடலில் குளித்த இளைஞர் ராட்ச அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடல் அலையில் சிக்கி உயிரிழந்த இளைஞர்...! விசாரணை நடத்தி வரும் போலீசார்..!
Published on
Updated on
1 min read

லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் எம்.ஜி.ஆர் தெருவை சேர்நதவர் ஜெயகாந்தன் (25).  டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் இவர், நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு, பாண்டி மெரினாவுக்கு சென்று கடலில் குளித்துள்ளார். இதற்கிடையே கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி ஜெயகாந்தன் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். 

பின்னர் அவரது உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜெயகாந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஒதியஞ்சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com