உத்திரப்பிரதேசத்தில் மேலும் தளர்வுகள்... இன்று முதல் திரையரங்குகளுக்கு அனுமதி...

உத்திரப்பிரதேசத்தில் இன்று முதல் திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் மேலும் தளர்வுகள்... இன்று முதல் திரையரங்குகளுக்கு அனுமதி...
உத்திரபிரதேசத்தில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் உத்திர பிரதேசத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதன் அடிப்படையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இதல் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், மல்டிபிளெக்ஸ்-கள், விளையாட்டு அரங்குகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 
இவை வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே திறக்கவும் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதியில்லை. திரையரங்குகளை பொறுத்தவரை டிக்கெட்டுகள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே விநியோகிக்கப்படும் என்றும் நேரடி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.