வரலாற்றில் முதல்முறையாக வெளியே எண்ணப்பட உள்ள திருப்பதி உண்டியல் காணிக்கை...

திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல்முறையாக இன்று முதல் கோவிலுக்கு வெளியே எண்ணப்பட உள்ளது.

வரலாற்றில் முதல்முறையாக வெளியே எண்ணப்பட உள்ள திருப்பதி உண்டியல் காணிக்கை...

திருப்பதி | ஏழுமலையானை  தினமும் சுமார்  80,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். பக்தர்களின் காணிக்கை மூலம் ஏழுமலையானானுக்கு தினமும் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையும், ஒரு சில நாட்களில் ஏழு கோடி ரூபாய் வரை கூட  வருமானமாக கிடைத்துள்ளது.

பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம்,ஆபரணங்கள் ஆகியவற்றை கோவிலுக்கு உள்ளேயே கணக்கிட்டு பணத்தை வங்கிகளில் தேவஸ்தான நிர்வாகம் செலுத்தி வந்தது. காணிக்கையாக கிடைக்கும் ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்திற்கு பாதுகாப்பாக எடுத்து சென்று அங்கு அவற்றை அவற்றை பத்திரப்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | பெருமாள் கோயிலுக்கு 25 கிலோ வெள்ளி கவசம் நன்கொடை...

கோவில் வளாகத்தில் இடவசதி இன்மை போன்ற காரணங்களால் காணிக்கையாக கிடைக்கும் பணம்,ஆபரணங்கள் ஆகிவற்றை கோவிலுக்கு வெளியே கணக்கிட தேவஸ்தான நிர்வாகம் ஓர் ஆண்டுக்கு முன் முடிவு செய்தது.

இந்த நிலையில் 23 கோடி ரூபாய் செலவில் ஏழுமலையான் கோவிலுக்கு வெளியே அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட காணிக்கை பணம் கணக்கிடும் வளாகம் கட்டப்பட்டது. அந்த வளாகத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த பிரம்மோற்சவத்தின் போது திறந்து வைத்தார்.

மேலும் படிக்க | 1.9 கோடி ரொக்கம், 1.6 கிலோ தங்கம் உண்டியல் காணிக்கை...

காணிக்கை பணம் கணக்கிடுவதை பக்தர்கள் வெளியில் இருந்து பார்க்கும் வகையில் அந்த வளாகத்தில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அதி நவீன சிசிடிவி கேமராக்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று முதல் காணிக்கையாக கிடைக்கும் பணத்தை புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் கணக்கிடுவதற்காக இன்று காலை சில்லரை நாணயங்களை மூட்டி மூட்டையாகவும், பணத்தாள்களை பண்டல் பண்டலாகவும் கட்டி கோவிலில் இருந்து மொத்தமாக வெளியில் கொண்டு வந்தனர்.

இன்று காலை 10 மணிக்கு மேல் புதிய மண்டபத்தில் பூஜைகள் நடத்தி அங்கு தேவஸ்தான வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் கோவிலுக்கு வெளியே பக்தர்களின் காணிக்கை பணம் உள்ளது.

மேலும் படிக்க | தீபத்திருவிழா...அதிகாரிகளுக்கு அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு...!