”இத்தருணம் நாட்டிற்கே பெருமையான தருணம்......” பிரதமர் மோடி!!!

”இத்தருணம் நாட்டிற்கே பெருமையான தருணம்......” பிரதமர் மோடி!!!
Published on
Updated on
1 min read

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஆக்கப்பூர்வமாக அமைய எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்:

2023 முதல் 2024ம் நிதியாண்டிற்கான முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத்தலைவர் உரையுடன் இரு அவைகளிலும் கூட்டம் தொடங்குவது வழக்கம்.  இதனையொட்டி ராஷ்டிரிய பவனில் இருந்து முப்படை மரியாதையை ஏற்றுக்கொண்டு குண்டுதுளைக்காத காரில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்றம் சென்றடைந்தார்.

நாட்டிற்கே பெருமை:

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத்தலைவர் உரையாற்றுவது நாட்டிற்கே பெருமை என தெரிவித்தார்.  பெண்களுக்கு உலக அரங்கில் கவுரவத்தை தேடித்தரும் சந்தர்ப்பமாக இது அமைவதாகவும், நாட்டின் எதிர்காலத்தையும் வளர்ச்சியையும் மெய்ப்பிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமையும் எனவும் அவர் உறுதியளித்தார்.  இக்கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான முறையில் எதிர்கட்சிகள் பங்களிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com