ஏலே... நீ ஒரு ஆர்டிஸ்டுன்னு நிரூபிச்சுட்டல்லே...

இலையை அழகாக வெட்டி அதை ஓவியமாக மாற்றும் ஓவியர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஏலே... நீ ஒரு ஆர்டிஸ்டுன்னு நிரூபிச்சுட்டல்லே...
Published on
Updated on
1 min read

ஃபீஃபா உலகக்கோப்பை கால்பந்துக்காக தற்போது நடைப்பெற்ற் வருகிறது. அதில் பல பெரும் ஜாம்பவான்கள் கலந்து கொண்டு சிறந்த முறையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, தங்களது நாடுகளுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

இந்தியாவில் எப்படி என சொல்வதற்கு முன்பு, உலகளவில் பார்த்தோமேயானால், அங்கு கிரிக்கெட் விட கால்பந்து போட்டிகளுக்கு தான் மோகம் அதிகம். ஆனால், கால்பந்து பற்றி என்னவென்றே தெரியாவிட்டாலும், கால்பந்து வீரர்களில், உலகளவில் பிரசித்தி ஆனவர்கள் ஒரு சிலர் தான். ஜூனியர் நேய்மர், ரோனால்டோ, மெஸ்ஸி போன்ற சிலர் தான் பட்டித் தொட்டி எங்கும் பரவியவர்கள்.

இந்நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாருதத் என்ற கலைஞர் புதுமையான முறையில் தனக்கு பிடித்த கால்பந்து வீரர்களின் உருவங்களை இலைகளில் வரைந்து வருகிறார். இது தொர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், தனக்கு இலைகளில் ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் இருப்பதாகவும், உலகக் கோப்பை உலகக் கோப்பையை முன்னிட்டு வீரர்களின் உருவங்களை வரைந்து வருவதாகவும் கூறினார்.

இவரது கலையானது தற்போது பலரது கவனத்தைப் பெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com