மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை உறுதி செய்ய வேண்டும்... அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு...

புயலை முன்னிட்டு மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை உறுதி செய்து கொள்ளுங்கள் என பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை உறுதி செய்ய வேண்டும்... அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு...

புயல் சார்ந்த சூழலை பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், பிரதமருக்கான முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர், தேசிய பேரிடர் பொறுப்பு படையின் இயக்குனர் ஜெனரல் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜெனரல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புயலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பின்பு, தேசிய பேரிடர் பொறுப்பு படையின் இயக்குனர் ஜெனரல் அதுல் கார்வார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜாவத் புயலை எதிர்கொள்வதற்காக தேவையான இடங்களில் 29 குழுக்கள் முன்பே குவிக்கப்பட்டு விட்டன என்றும்,  தற்போது மொத்தம் 33 குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், புயல் பாதிப்பு ஏற்பட கூடிய பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என உறுதிப்படுத்தி கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதேபோன்று, மின்சாரம், தொலைதொடர்பு, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய சேவைகளும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் உறுதி செய்து கொள்ளுங்கள் என்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.