
தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டம் பகுதியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் நேற்று பிற்பகலில் மண்சரிவு ஏற்பட்டது.
அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த 5-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், பாதுகாப்பு மேலாளர் ஜெயராஜ், சுரங்க உதவி மேலாளர் சைதன்யதேஜா, ஒப்பந்த தொழிலாளி தோட்டா ஸ்ரீகாந்த் ஆகிய மூவர் இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்தனர். இவர்களது சடலத்தை கைப்பற்றி சிங்கரேணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.