ஜம்மு காஷ்மீரின் கலாசாரத்தை உடைக்க முயற்சி... ஆர்.எஸ்.எஸ், பாஜக மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு...

ஜம்மு காஷ்மீரின் கலாசாரத்தை உடைக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக முயற்சிப்பபதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் கலாசாரத்தை உடைக்க முயற்சி... ஆர்.எஸ்.எஸ், பாஜக மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு...

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் சென்றார். தனது சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான நேற்று கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய ராகுல்காந்தி, காஷ்மீர் வருவது தனக்கு சொந்த வீட்டிற்கு வருவது போல் உள்ளதாகவும், தனது குடும்பத்திற்கும், காஷ்மீருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காஷ்மீர் மக்கள் மத்தியில், அன்பு, சகோதரத்துவம், கலப்பு கலாசாரம் நிலவி வருகிறது என்பதை சுட்டிக்காட்டிய  ராகுல்காந்தி,  இந்த கலாசாரத்தை உடைக்க வேண்டும் என பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.. அவைகள் இரண்டும், இந்த அன்பு மற்றும் சகோதரத்துவம் மீது தாக்குதல் நடத்துகின்றன எனவும் விமர்சித்த ராகுல்காந்தி, காஷ்மீர் மக்கள் பலவீனமடைந்ததன் காரணமாக மாநில உரிமையை மத்திய அரசு பறித்து கொண்டதாகவும் வேதனை தெரிவித்தார்.