ஒரே நாளில் திருமணம் செய்த இரட்டை சகோதரிகள்... ஒரே நாளில் குழந்தை பெற்ற அதிசயம்...

கேரளாவில் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள், இருவரும் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரே நாளில் திருமணம் செய்த இரட்டை சகோதரிகள்... ஒரே நாளில் குழந்தை பெற்ற அதிசயம்...
Published on
Updated on
1 min read

கேரளா மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற பகுதியை சேர்ந்தவர் முன்னாள் இராணுவ வீரர் சந்திரசேகர் நாயர். இவரது மகள்களான ஸ்ரீபிரியா மற்றும்  ஸ்ரீலட்சுமி ஆகிய இருவரும் ஒரே பிரசவத்தில் பிறந்து இணைபிரியா சகோதரிகளாக வளர்ந்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஒரே நாளில், ஒரே மண்டபத்தில்  திருமணம் செய்து கொள்ள ஆசைபட்டுள்ளனர். திருமண வயதை நெருங்கிய இவர்களின் விருப்ப படியே அவரது தந்தை இருவருக்கும் ஒரே  நாளில் திருமணத்தை முடித்து வைத்துள்ளார்.

இரட்டை சாகோதரியான இருவருக்கும் அவர்கள் பிறந்த மருத்துவமனையிலேயே குழந்தையை பெற்றெடுக்கவும் விரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது அவரை மருத்துவமனையில் அனுமதித்த அன்று இரவே ஸ்ரீலெட்சுமிக்கும் பிரசவ வலி ஏற்பட்டு, அவரையும் அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த நிலையில்  நேற்று முன்தினம் ஸ்ரீபிரியாவிற்கு மதியம் 2.20 மணியளவில்  பெண் குழந்தை பிறந்ததுள்ளது. இதையடுத்து ஸ்ரீ லெட்சுமியும்  மாலை 6.45 மணிக்கு பெண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அக்குழந்தைகள் இருவருக்கும் ஒரே வகையான இரத்த பிரிவு எனவும், அவை “ஒ” பாசிட்டிவ் வகை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com