ஆக.2 முதல் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு!

ஆகஸ்ட 2-ம் தேதி முதல் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆக.2  முதல் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு!

ஆகஸ்ட 2-ம் தேதி முதல் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததை யொட்டி பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில்  தற்போது தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020- ஆம் ஆண்டுக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2- ஆம் தேதி முதல் மீண்டும் தொடரும் என யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேர்முகத் தேர்விற்கான அழைப்பு upsc.  gov.in, upsconline.in-ல் என்ற இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் ஜூன் 27- ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 21- ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், யுபிஎஸ்சி அறிவிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.