உக்ரைன் விவகாரம்: படையெடுக்கும் திட்டமில்லை... அமைதியாக தீர்ப்பதற்கு வாய்ப்பேயில்லை - ரஷ்ய அதிபர் அதிரடி

உக்ரைன் பிரச்சினையை அமைதியாக தீர்க்க வாய்ப்பில்லை என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் விவகாரம்: படையெடுக்கும் திட்டமில்லை... அமைதியாக தீர்ப்பதற்கு வாய்ப்பேயில்லை -  ரஷ்ய அதிபர் அதிரடி

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது.

இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என பசாங்கு செய்து வரும் ரஷ்யா, பெலராஸ் நாட்டு படைகளுடன் இணைந்து தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் விவகாரத்தை அமைதியான முறையில் தீர்க்க எந்த வாய்ப்பும் இல்லை என்று அதிபர் விளாடிமிர் புதின் இன்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.