இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு ஒரே சீருடையா?!!

இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு ஒரே சீருடையா?!!

கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஆடைக் கட்டுப்பாடு வேண்டும் என்ற கோரிக்கை பொதுநல வழக்காக உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

இன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது. இந்த கோரிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவையும் பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக்கோரிய மனுவிற்கு பதிலளித்த உச்சநீதிமன்றம் “இது உச்சநீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டது அல்ல” எனக் கூறியுள்ளது.

இதையும் படிக்க: காங்கிரஸ் தொண்டர்களால் மிரட்டப்பட்டரா கடை உரிமையாளர்!!எதற்காக?