பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.!!!

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது. 

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.!!!

கடந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் 3 புதிய வேளாண்  சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை முறையாக திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதன்படி வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறவுள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

பிரதமரின் இல்லத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.