அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே...!

அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே...!
Published on
Updated on
1 min read

ஒற்றுமைப் பயணத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவை ஒன்றிணைக்கும் வகையிலும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்திலும் இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி முன்னெடுத்தார். குமர் முதல் காஷ்மீர் வரை செல்லும் பாரத் ஜோடோ யாத்ராவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கிய ராகுல்காந்தி, வரும் ஜனவரி 30 ஆம் தேதி தனது நடைப்பயணத்தை முடிக்கவுள்ளார்.

தற்போது ஜம்முகாஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முக்தியுடன் ராகுல்காந்தி இன்றைய பயணத்தை தொடங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஒற்றுமைப் பயணத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில் வரும் 30ம் தேதி பிரம்மாண்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைப்பயணத்தின் நிறைவு விழாவில், பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக அமித்ஷாவிடம் கார்கே வலியுறுத்தியுள்ளார். நாள்தோறும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com