குஜராத் அரசியலில் திடீர் பரபரப்பு: முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய் ரூபானி...

குஜராத் மாநில முதலமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ள விஜய் ரூபானி, புதிய தொலைநோக்கு திட்டங்களுக்கு புதிய தலைமை தேவை என கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத் அரசியலில் திடீர் பரபரப்பு:  முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய் ரூபானி...

குஜராத் மாநில முதலமைச்சராக கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி பதவியேற்ற விஜய் ரூபானி, பா.ஜ.க.வை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் விஜய் ரூபானி, தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்மாநில ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் தமது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ள அவர், குஜராத் முதலமைச்சராக பணியாற்ற தமக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி என கூறியுள்ளார்.