ராணுவ வீரர் மனைவியிடம் அத்துமீறல்.. "அதுவும் அங்கவச்சே".. அவர்கள் 5 பேர் மட்டுமே பொறுப்பு.. பெண் பரபரப்பு புகார்!!

ராஜஸ்தான் ராணுவ வீரர்கள் தங்கும் விடுதியில் வசிக்கும் ராணுவ வீரரின் மனைவி ஒருவர் போலீசில் பாலியல் வன்கொடுமை முயற்சிக்கான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
ராணுவ வீரர் மனைவியிடம் அத்துமீறல்.. "அதுவும் அங்கவச்சே".. அவர்கள் 5 பேர் மட்டுமே பொறுப்பு.. பெண் பரபரப்பு புகார்!!
Published on
Updated on
1 min read

ராணுவ வீர்ர மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த சம்பவத்தை மூடிமறைக்க முயன்றதாக நான்கு உயரதிகாரிகளின் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் ராணுவ வீரர்கள் தங்கும் விடுதியில் வசிக்கும் ராணுவ வீரரின் மனைவி ஒருவர் போலீசில் பாலியல் வன்கொடுமை முயற்சிக்கான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில்,  இரண்டு நாட்களுக்குப் முன் மாலையில், ராணுவ வீரரின் மனைவி குளித்துக்கொண்டிருந்தபோது, ராணுவத்தில் சுபேதார் அந்தஸ்தில் இருக்கும் ஒரு உயர் அதிகாரி ஒருவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். 

அப்போது அந்த பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார். அவர் அலறியதை கேட்ட பெண்ணின் கணவர் பதறி அடித்து ஓடி வந்துள்ளார். இருவரும் அவரை பிடிக்க முயன்றனர், ஆனால் அவர் ஓடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை காவல் நிலைய அதிகாரி பரத் ராவத் தெரிவித்து உள்ளார்.

மேலும், ராவத் கூறும்போது, தம்பதியினர் உடனடியாக இராணுவத்தில் உள்ள மூத்த அதிகாரிகளுக்குத் இந்த சம்பவம் குறித்து தெரிவித்ததாகவும், இந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருக்கும் முயற்சியில் இறங்கி தம்பதியை மிரட்டியுள்ளனர். அவர்களை வெளியே வரவிடாமல் வீட்டிலேயே முடக்கி உள்ளனர் என புகாரில் உள்ளது.

இதையடுத்து 4 உயர் அதிகாரிகளின் பெயர்கள் எப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் 5 பேர் மட்டுமே பொறுப்பு என்று அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பாதுகாப்பு துறை செய்தி தொடர்பு அதிகாரி அமிதாப் சர்மா கூறுகையில், “ஜோத்பூர் ராணுவ நிலையத்தில் தங்கியிருக்கும் ராணுவ வீரரின் மனைவி, பணியில் இருக்கும் மற்றொரு ராணுவ வீரர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய ராணுவம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com