50% பேர் தடுப்பூசி போட்டிருந்தாலும் 3-ம் அலை குறித்த ஆபத்து மிகுதியாக உள்ளதாக எச்சரிக்கை  

இந்தியாவில் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள போதிலும் 3 ஆம் அலை குறித்த ஆபத்து மிகுதியாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் கவலை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டு கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய கீதா கோபிநாத், உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளதாகவும், நடப்பாண்டு இந்திய பொருளாதாரம் 9.5 சதவிகித வளர்ச்சியையும், அடுத்த ஆண்டில் 8. 5 சதவிகித வளர்ச்சியையும் காணும் எனவும் கூறினார்.

இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்ட போதிலும் 3ம் அலை குறித்த ஆபத்து மிகுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.