போலி கணக்குகள் விவகாரம் - மத்திய அரசுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் உடந்தையாக செயல்பட்டதா?

போலி கணக்குகளை நீக்கும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் உடந்தையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்பத்தி வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் தரப் பில் போலி ஃபேஸ்புக் கணக்குகள் துவங்கப்பட்டு மக்களை திசை திருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளுடன் தொடர் பில் இருந்த போலி ஃபேஸ்புக் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் அகற்றியது.

ஆனால் பாஜக எம். பி. ஒருவருடன் நேரடியாக இணைக்கப்பட்ட போலி கணக்குகளை மட்டும் பேஸ்புக் நிறுவனம் நீக்கவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் அதனை வேண்டுமென்றே நீக்காமல் விட்டுவிட்டதாகவும் குற்றம்சாட்டு எழுந்துள்ளது.