”நாங்கள் இந்தியர்கள், இந்தியாவில் இருக்கவே விரும்புகிறோம்” நீதிபதி குப்தா

”நாங்கள் இந்தியர்கள், இந்தியாவில் இருக்கவே விரும்புகிறோம்” நீதிபதி குப்தா

சீக்கியர்கள் அணியும் தலைப்பாகைக்கு ஹிஜாபுடன் எந்த ஒப்பீடும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.  சீக்கியர்கள் தலைப்பாகை மற்றும் கிர்பான் அணிவது அனுமதிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியுள்ளது.

உச்சநீதிமன்றம்:

நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்தபோது இந்த கருத்துகள் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மனுதாரர்களில் ஒருவருக்காக ஆஜரான வழக்கறிஞர் நிஜாமுதீன் பாஷா, இஸ்லாம் மற்றும் அரேபிய மாணவர், ஹிஜாபுடன் கிர்பானுக்கும் தலைப்பாகைக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கமளிக்க முயன்றதாக தெரிகிறது. 

ஹிஜாப் என்பது இஸ்லாமிய பெண்களின் மத நடைமுறையின் ஒரு பகுதியாகும் என்றும், பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருவதை தடுக்க முடியுமா என்றும் வழக்கறிஞர் பாஷா கேள்வியெழுப்பியுள்ளார். சீக்கிய மாணவர்கள் கூட தலைப்பாகை அணிகிறார்களே என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

பாஷா-குப்தா:

கலாச்சார நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று  பாஷா வலியுறுத்தியுள்ளார்.

கிர்பானை எடுத்துச் செல்வது அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால் சீக்கியர்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று நீதிபதி குப்தா கூறியுள்ளார். "எனவே நடைமுறைகளை  அதனுடன் ஒப்பிட வேண்டாம்" என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நீதிபதி குப்தா, தலைப்பாகைகள் மீது சட்டரீதியான தேவைகள் உள்ளன, இவை அனைத்தும் நாட்டின் கலாச்சாரத்தில் நன்கு நிறுவப்பட்ட நடைமுறைகள் என்று விளக்கமளித்துள்ளார்.

பாஷா பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளின் உதாரணங்களை மேற்கோள் காட்ட முயற்சித்தார்.  ”பிரான்ஸ் அல்லது ஆஸ்திரியாவைப் போல் நாங்கள் இருக்க விரும்பவில்லை” என்று நீதிபதி குப்தா கூறியுள்ளார்.  மேலும் "நாங்கள் இந்தியர்கள், இந்தியாவில் இருக்கவே விரும்புகிறோம்" என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாஷா கூறுகையில், ”ஹிஜாப் முஸ்லிம் பெண்களை பாதுகாக்கிறது.” என்று தெரிவித்தார்.

ஹிஜாப் ஒரு கலாச்சார நடைமுறை என்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனுமானத்தின் அடிப்படையிலானவை என்றும் பாஷா கூறியுள்ளார். அவர் அவருடைய வாதங்களை ஆதரிக்க பல்வேறு மத புத்தகங்களின் மேற்கோள்களை வாதாடியுள்ளார்.

ஹிஜாப் ஒரு "பரிந்துரை" மற்றும் "அத்தியாவசியம் அல்ல” என்று உயர்நீதிமன்றம் கூறியது அடிக்குறிப்பை தவறாகப் படித்தது என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

நீதிபதி காமத்:

விசாரணையின் போது, ​​மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான காமத், ஹிஜாப் இன்றியமையாத மதப் பழக்கமா என்பது குறித்து கர்நாடகா, கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளால் மாறுபட்ட கருத்துக்கள் எடுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மெட்ராஸ் மற்றும் கேரளா நீதிமன்றங்கள் ஹிஜாபை ஒரு அத்தியாவசிய மத நடைமுறையாகக் கொண்டுள்ளன, ஆனால் கர்நாடக உயர் நீதிமன்றம் வேறுபட்ட கருத்தை கொண்டுள்ளது என காமத் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ”அவர் நிச்சயம் நிறுத்துவார்” உக்ரன் அதிபருக்கு நம்பிக்கை அளித்த பிரெஞ்சு அதிபர்