தினசரி பாதிப்பு 5 லட்சத்தை தொட்டாலும் சமாளிப்போம் - மத்திய அரசு

நாள் ஒன்றுக்கு 5 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவானாலும் அதனை சமாளிக்க இந்தியா தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தினசரி பாதிப்பு 5 லட்சத்தை தொட்டாலும் சமாளிப்போம் - மத்திய அரசு

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், வரவிருக்கும் பண்டிகை காலங்களில் கொரோனா உச்சத்தை அடையக்கூடிய ஆபத்து உள்ளதால் மக்கள் மிகுந்த கனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 

இந்தியாவில் 34 மாவட்டங்களில்  வாராந்திர பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாக இருப்பதால், கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெகு தொலைவில் இருப்பதாகவும்  நாடு முழுவதும் மெகா முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் போதிலும் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறினார்.

இந்தியாவின் சராசரியாக நாளொன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாகவும், நாடு முழுவதும் 8. 36 லட்சம் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க கூடிய வகையில் படுக்கை வசதிகள் மற்றும் 10 லட்சம் நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.