அரசு அதிகாரிகள் நெருப்புடன் விளையாடுகிறார்கள் - மேற்கு வங்க ஆளுநர்
அரசு அதிகாரிகள் நெருப்புடன் விளையாடிக்கொண்டிருப்பதாக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், ஆளுநர் ஜக்தீப் தன்கர் இடையிலும் மோதல் போக்கு நீடிக்கிறது. அண்மையில் எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியை ஜர்கிராம் செல்லவிடாமல் தடுத்ததற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஜக்தீப், தலைமை செயல் அதிகாரிக்கு 7 நாள் கால அவகாசம் வழங்கியிருந்தார்.
இந்தநிலையில் கொல்கத்தாவில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜக்தீப், அரசு அதிகாரிகள் மாநிலத்தின் விதிமுறைகளை மறந்துவிட்டதாக விமர்சித்தார்.
அவர்கள் நெருப்புடன் விளையாடுவதாக சாடிய அவர், அதிகாரிகளின் நடவடிக்கைகள் அரசியலமைப்பு விதிமுறைகளை மீறும் வகையில் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.