என்ன 48500 வருடங்களாக வாழ்ந்த வைரஸ் உயிர்ப்பிக்கப்பட்டதா?!!

என்ன 48500 வருடங்களாக வாழ்ந்த வைரஸ் உயிர்ப்பிக்கப்பட்டதா?!!

பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் வேகமாக உருகும் விதம், இதுபோன்ற சூழ்நிலையில் திடீரென வைரஸ் தொற்று பரவினால், ஆபத்து அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உயிர்ப்பிக்கப்பட்ட வைரஸ்:

விஞ்ஞானிகள் 48,500 ஆண்டுகளாக சைபீரியாவின் பெர்மாஃப்ரோஸ்ட் பனியில் இருந்த பல வைரஸ்களுக்கு புத்துயிர் அளித்துள்ளனர்.  அவை அனைத்தும் ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சைபீரியாவின் பெர்மாஃப்ரோஸ்டிலிருந்து ஐந்து வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை எனவும் அவைகளின் பெயர் Megavirus Mammoth எனவும் தெரிவித்துள்ளனர்.  

பனிக்காலத்திலிருந்து:

இந்த வைரஸ்கள் யானைகளின் மூதாதையர்களான மாமூத்கள் சைபீரியாவில் சுற்றித் திரிந்த காலத்தைச் சேர்ந்தவை எனவும் பனி காலத்தில் பல வைரஸ்கள் சைபீரியாவின் பெர்மாஃப்ரோஸ்ட் பனியில் புதைக்கப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளனர்.

திடீரென பரவினால்:

அதில் சிலவற்றை விஞ்ஞானிகள் வெளியே எடுத்து உயிர்ப்பித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.  பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் வேகமாக உருகும் விதம், இதுபோன்ற சூழ்நிலையில் திடீரென வைரஸ் தொற்று பரவினால், ஆபத்து அதிகம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.  

அதனால்தான் இந்த வைரஸ்களை முன்கூட்டியே கண்டுபிடித்து ஆய்வு செய்ய விரும்புகிறோம் எனவும் இதன் மூலம் அவற்றின் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கான வழியைக் கண்டறிய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மீண்டும் ஒருமுறை சாதிக்குமா நாசா?!!