
பெங்களூருவில் தற்போது, வழக்கத்திற்கும் மாறாக கடும் மழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ளக்காட்டாக மூழ்கியுள்ளது. கண் கண்ட இடமெல்லாம், மோசமான மழை நீர் தேக்கங்களும், படகுகளும் நிரைந்த வண்ணம் உள்ளன.
மேலும் படிக்க | ‘போட்’ விடும் அவல நிலை; வெள்ளத்தில் மூழ்கிய பெங்களூரு!!!
இந்த நிலையில், மின்சாரம் தாக்கி இளம்பெண் ஒருவர், அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூரு நகரில் கடந்த இரு தினங்களாக விடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகள், குடியிருப்புகள் எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளன. இந்தநிலையில் பெங்களூருவின் ஒயின்பீல்டு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், ஸ்கூட்டியில் சென்ற 23 வயதான அகிலா என்ற இளம்பெண், நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படிக்க | தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய பெங்களூர்!!!
அவர் மட்டுமின்றி பலரும், இந்த கனமழை காரணமாக படுகாயமடைந்து, தினசரி வாழ்வாதாரமே வீழ்ந்து கிடக்கும் நிலையில், ஒரு பகுதியில், புள்டோசர் மூலமாக, பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் மறுபகிர்வு செய்து, “ஆனால், இரண்டாவது முறை பார்க்கும் போது, இதுவும் சிறப்பாக தான் இருக்கிறது.” என கமெண்ட் செய்திருக்கிறார்.
இதனால், பல நெட்டிசன்கள் கோபமடைந்துள்ளனர். இங்கு எத்தனை சிக்கல்களை சந்தித்து வருகிறோம்? அங்கு ரூமில் அமர்ந்து கொண்டு கமெண்ட் செய்வது நியாயமா என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.