பில்கிஸ் பானோ வழக்கின் நீதிபதி கூறுவதென்ன.....

பில்கிஸ் பானோ வழக்கின் நீதிபதி கூறுவதென்ன.....
Published on
Updated on
1 min read

குஜராத்தில் 2002ல் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட பலருள் பில்கிஸ் பானோவும் ஒருவராவார்.  கலவரகாரர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அவருடைய மூன்று வயது குழந்தையுடன் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் 11 குற்றாவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நன்னடத்தைக் காரணமாக குஜராத் மாநில அரசால் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன.  தான் அமைதியாக வாழ வேண்டும் எனவும் அதனால் அவர்களின் விடுதலைக்கான ஆணையை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார் பில்கிஸ்.  மேலும் அவர்களின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில் பில்கிஸ் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சால்வியிடம் கருத்து கேட்டபோது விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளை பாராட்டி வரவேற்ற செயல்கள் அருவருக்கதக்கது என கூறியுள்ளார்.  விடுதலையான குற்றவாளிகளே இது போன்ற பாராட்டுகளை ஏற்றுக் கொண்டிருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  விடுதலை குறித்து கருத்து கேட்டதற்கு அவருக்கு எதனால் விடுதலை செய்யப்பட்டனர் என்ற முழுமையான காரணம் தெரியாததால் கருத்து கூற விருப்பமில்லை எனக் கூறிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com