புதுவையில் விமான சேவை எப்போது?

புதுச்சேரியில் விரைவில் விமான சேவை தொடங்கப்படவுள்ளதாக  அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.  

புதுவையில் விமான சேவை எப்போது?

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். தமிழ்நாட்டில் இருந்து முதற்கட்டமாக 104 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டிய நிலை உள்ளது, அதற்கான பணிகளை தொடங்கி உள்ளோம். முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுத உள்ளோம் என்றார்.

ஏற்கனவே துணைநிலை ஆளுநர் தமிழக முதல்வரை சந்தித்து விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் கேட்டு உள்ளார், நாங்களும் புதுச்சேரி அரசு சார்பில் தமிழக முதல்வரை சந்தித்து முதல் கட்டமாக 104 ஏக்கர் இடம் கேட்க உள்ளோம். இரண்டாம் கட்டமாக 217 ஏக்கர் பெற்று பின்பு அதிக விமானங்கள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.  அடுத்த ஓர் ஆண்டுக்குள் புதிய ஓடுதளம் அமைக்கப்படும். தற்போது விமான சேவை வழங்க நான்கு விமான நிருவனங்கள் தயாராக உள்ளனர், மேலும் புதுச்சேரியில் இருந்து விமான சேவை வழங்கிய நிறுவனங்களும் அழைத்து பேச திட்டமிட்டுள்ளோம்.

புதுச்சேரியில் இருந்து பெங்களூர், ஹைதராபாத், சேலம், கொச்சின் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்க விமான நிருவனங்கள் கேட்டுள்ளனர். உடனடியாக ஏற்கனவே இயக்கப்பட்டு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள பேங்களுர், ஹைதராபாத் விமான சேவையை தொடங்க விமான நிருவனங்களுக்கு  கடிதம் எழுதி உள்ளோம், அவர்கள் விமான சேவையை தொடங்குவார்கள்.