ஆம் ஆத்மி பெட்ரோலுக்கு எங்கே போவான்?- எம் பி கனிமொழி சரமாரி கேள்வி:

மக்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, பெட்ரோல் போன்ற எரிபொருள் குறித்து, மத்திய அரசை சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

ஆம் ஆத்மி பெட்ரோலுக்கு எங்கே போவான்?- எம் பி கனிமொழி சரமாரி கேள்வி:

மக்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் பணவீக்கம் 7 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகக் கூறினார். இதனால் கோபமடைந்த எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்பினர். அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் கனிமொழி, சரமாரியாக கேள்வியெழுப்பி, பலரது கரகோஷங்களைப் பெற்றார்.

ஜி.எஸ்.டி வரி:

அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதீத ஜி.எஸ்.டி வரி காரணமாக, சாமானிய மக்கள் அவதிப்படுவதாகக் கூறிய கனிமொழி, எரிவாயுகளின் விலைவாசிக் குறித்துப் பேசுகையில் அடித்தட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு, ஒவ்வொரு நாளும், வாழ்க்கையே போராட்டமாக மாறக் கூடிய ஒரு நிலையை இந்த ஆட்சி உருவாக்கியுள்ளது என்று கூறியது, பலராலும் கைதட்டி ஆமோதிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ஜூன் 28ல் 47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் - மத்திய அரசு தெரிவிப்பு!

எரிபொருள் விலை:

அப்போது தான் பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள் விலை உயர்வு குறித்து பேசத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “தினசரி பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி பதவியேற்பதற்கு முன்பு, 2014 அளவில், பெட்ரோல் விலை, 71 ரூபாய்; டீசல் விலை 53 ரூபாய்; சமையல் எரிவாயு எல்.பி.ஜி கேஸ் சிலிண்டரின் விலை 414 ரூபாய். ஆனால், இன்று, பெட்ரோல் விலை நூறைத் தாண்டியது, டீசல் விலை நூறைத் தொட இருக்கிறது, மேலும், சிலிண்டர் விலை ஆயிரத்திற்கும் மேல், ஆயிரத்து இருநூறாக இருக்கிறது.

மேலும் படிக்க | இந்தியாவில் பணவீக்கம் 7%-க்கும் குறைவாகவே உள்ளது - நிர்மலா சீதாராமன்

ஆம் ஆத்மி:

இந்த நாட்டில், அதிகமாக அடித்தட்டிலே இருக்கக் கூடிய மக்கள், சாமானிய மக்கள், நீங்கள் அடிக்கடிச் சொல்லக் கூடிய வார்த்தையான, நான் இங்கு வந்து கற்றுக் கொண்ட இந்தி வார்த்தை ஆம் ஆத்மி, அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய இரு சக்கர வாகனங்களுக்கு, சாதாரணமாக ஒரு நாளுக்கு 2-3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதற்கு, சுமார் ஒரு நாளுக்கு 300 ரூபாய் என்றாலும், மாதத்திற்கு சுமார் 15,000 ரூபாய் ஆகலாம்.” என்று கூறினார்.

பணவீக்கத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள்:

பின், விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்த, சம்பளக் குறைவு குறித்துக் கூறினார். அப்போது, “கொரோனா காலக்கட்டத்தில், எம்.பி-க்களின் சம்பளங்களெ குறைக்கப்பட்டது. அதை நாங்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டோம். ஆனால், அரசே இப்படி செய்யும் போது, தனியார் நிறுவனங்கள் இதனைத் தாண்டி செய்யும். பல தனியார் நிறுவனங்கள், பல ஊழியர்களின் வருமானத்தை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்தது. பலர் வேலையையே இழந்தனர். இந்நிலையில், மாதம் 25-30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கக் கூடிய ஒரு குடும்பத்தில், கடிப்பாக வாகனப் பயன்பாடு இருக்கும். அப்படி, குறைந்தது 15,000 ரூபாய் பெட்ரோல், டீசலுக்கேக் கொடுக்க வேண்டிய நிலை, மற்றும், சிலிண்டருக்கு சுமார் 1065 ரூபாய் கொடுக்க வேண்டி இருந்தால், அவர்களால் எப்படி வாழ முடியும்?” என்று கூறினார்.

மேலும் படிக்க | தொடரும் பெட்ரோல் விலை உயர்வு : எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு !!

வாக்குறுதி நிரைவேற்றப்படவில்லை:

மேலும், கேஸ் சிலிண்டர்களின் கோட்டாவை விட்டுக் கொடுப்பவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிரைவேற்றப்படவில்லை என தனது கருத்துகளைத் தெரிவித்தார். இவரது இந்த கேள்விகள், பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.