இந்தியாவில் ஏழைகள் அதிகம் வசிக்கும் மாநிலம் எது? வெளியான அதிர்ச்சி தகவல்!!..

இந்தியாவில் ஏழைகள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் பீகார் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஏழைகள் அதிகம் வசிக்கும் மாநிலம் எது? வெளியான அதிர்ச்சி தகவல்!!..

இந்தியாவில் கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்க்கை நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நிலவும் வறுமை தொடர்பாக நிதி ஆயோக் ஆய்வு செய்து தனது முதல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. இதில்  பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பீகாரில் 51.91 சதவீதகளும் அதைத் தொடர்ந்து ஜார்கண்டில் 42.16 சதவீதம் பேர் ஏழைகள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தில் 37.79 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் 4-வது இடத்தில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தில் 36.65 சதவீதம் ஏழைகளும் மேகாலயா 32.67 சதவீத ஏழைகளுடன் ஐந்தாவது இடத்தில்  உள்ளனர் என்று நிதி ஆயோக்கின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் மிகக் குறைந்த வறுமையைப் பதிவு செய்த மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோவா மாநிலம் உள்ளது. தொடர்ந்து சிக்கிம், தமிழ்நாடு ஆகியவை குறைந்த வறுமையைப் பதிவு செய்த மாநிலங்கள் வரிசையில் உள்ளன.

கேரளாவில் 0.71 சதவீதம் ஏழைகளும் தமிழ்நாட்டில் 4.89 சதவீதம் ஏழைகள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் 3.76 சதவீதம் ஏழைகள், சிக்கிமில் 3.82 சதவீத ஏழைகள், பஞ்சாபில் 5.59 சதவீத ஏழைகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை புதுச்சேரி மக்கள் தொகையில் 1.72 சதவீதம் பேர் ஏழைகளாக உள்ளனர்.