பெங்களூருவில் வெளுத்து வாங்கும் கனமழை.. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் வெளுத்து வாங்கும் கனமழை.. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

பெங்களூரு நகரில் கனமழை இடைவிடாமல் வெளுத்து வாங்கியது. பல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் அளவுக்கு மேலாக கனமழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பெங்களூரு நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறன.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர். வித்யா பீட்டா பகுதியில் மிக அதிகமாக 113 மில்லி மீட்டர் மழை பதிவானது. சம்பங்கி ராம்நகர், நாகா புரா, தசரஹல்லி ஆகிய பகுதிகளில் 100 மில்லி மீட்டர் மழை பதிவானது.

பெங்களூரு நகரம் மட்டுமில்லாமல் மங்களூரு, கார்வார், குடகு, சிக்மங்களூர் ஆகிய மாவட்டங்களுக்கும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் அதிக மழை காரணமாக விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.