பெகாசஸ் மென் பொருளை பயன்படுத்த அனுமதி அளித்த அதிகாரி யார்? ராகுல்காந்தி கேள்வி...

பெகாசஸ் மென் பொருளை பயன்படுத்த அனுமதி அளித்த அதிகாரி யார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வினா எழுப்பியுள்ளார். 

பெகாசஸ் மென் பொருளை பயன்படுத்த அனுமதி அளித்த அதிகாரி யார்? ராகுல்காந்தி கேள்வி...

பெகாசஸ் மென்பொருள் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து , டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய , ராகுல் காந்தி , நீதிமன்றத்தின் உத்தரவு தங்களது கருத்துக்கு வலு சேர்ப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் பெகாசஸ் என்னும் உளவு பார்க்கும் மென்பொருளை இந்தியாவில் பயன்படுத்துமாறு உத்தரவிட்ட அதிகாரி யார் என்றும் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் எதிர்க்ட்சிகள் ஒருசேர எதிர்த்து வருவதாகவும், இந்த பெகாசஸ் யாருக்கு எதிராக பொருத்தப்பட்டது என்றும் வினா எழுப்பி  உள்ளார்.

இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் விதமாகவே பெகாசஸ் கருவி பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார் .இந்திய மக்கள் குறித்த தகவல்களை எந்த நாடாவது திரட்டி உள்ளதா என்றும்  ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சிக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் ராகுல் 
கூறியுள்ளார்.இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில் நீதி கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்