மகாராஷ்டிரா-சிவசேனா தலைமை யாருக்கு??

மகாராஷ்டிரா-சிவசேனா தலைமை யாருக்கு??

மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம்:

மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அவரது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பெரும்பான்மை இழந்த உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தோல்வியுற்று, முதலமைச்சர் பதவியை  ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். இதனால் பாஜகவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றனர்.

தேர்தல் ஆணையம் கடிதம்:

உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரை தலைமையாக கொண்ட சிவசேனாவின்  இரு அணிகளி  யார் அதிகாமன உறுப்பினர்கள் கொண்டு இருக்கின்றனர் என்பதை ஆவணங்களுடன் நிருபிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் இன்று கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையம் இரு தரப்பினருக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் இரு அணிகளும் தங்கள் தேர்தல் சின்னம் மீதான கோரிக்கை பதில்களை ஆதாரங்களுடன் தாக்கல் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே அணி கோரிக்கை:

தேர்தல் ஆணையத்திடம்  ஷிண்டே அணியினர் அவர்களே உண்மையான சிவசேனா என்று முன்னரே தெரிவித்துள்ளனர்.  அதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மகாராஷ்டிர சட்டமன்ற சபாநாயகர் ராகுல் நர்வேகர் வழங்கிய அங்கீகாரத்தையும் ஆதாரம் காட்டியுள்ளனர்.

உத்தவ் தாக்கரே முறையீடு:

உண்மையான சிவசேனாவாக  ஏக்நாத் ஷிண்டே அணி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற மனு  இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஷிண்டே அணியினரால் வழங்கப்பட்டுள்ளது.  இது குறித்த விசாரணைக்கு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா முகாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.  

இதற்கு முன்னதாகவே சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.  அதில்,கட்சியின் பெயர் மற்றும் அதன் தேர்தல் சின்னம் மீதான உரிமை கோரல்களுக்கான பிரதிநிதித்துவங்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு முன் அவர்களின் கருத்தை கேட்குமாறு கேட்டுக்கொண்டிருந்தது.