காங்கிரஸில் அடுத்த தலைவர் யார்? இன்று மாலை வெளியாகும் அறிவிப்பு!

காங்கிரஸில் அடுத்த தலைவர் யார்? இன்று மாலை வெளியாகும் அறிவிப்பு!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்து முடிந்ததை அடுத்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

காங்கிரஸ் தலைவர் தேர்தல்:

காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இக்கட்சிக்கு 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் நிரந்தர தலைவரை நியமித்திடவும், கட்சியை வலுப்படுத்திடவும் திட்டமிட்ட அவர்,  தேர்தலை அறிவித்தார். அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் கேரள எம்.பி சசிதரூர் ஆகியோர் போட்டியிட்ட நிலையில், தேர்தலுக்கென 68 இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 9 ஆயிரத்து 915 பிரதிநிதிகளில், 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். இந்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் டெல்லி கொண்டு வரப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: நிரூபர்களை தடுத்த காவல் துறையினர்...கோபத்தில் கொந்தளித்த ஈபிஎஸ்...!

அடுத்த தலைவர் யார்?: 

இந்த நிலையில் இந்த வாக்குகள் இன்று காலை 10 மணியில் இருந்தே எண்ணப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, இன்று மாலைக்குள் காங்கிரஸின் புதிய தலைவர் யார் என்ற முடிவு வெளியாகும் என கூறப்படுகிறது. 137 ஆண்டு கால காங்கிரஸ் வரலாற்றில், தலைவர் பதவிக்கு, ஆறாவது முறையாக தற்போது தேர்தல் நடந்துள்ளது. இதில், 24 ஆண்டுக்குப் பிறகு, சோனியா குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.