உத்தரகாண்ட், கோவா தேர்தலில் மகுடம் சூட்டப்போவது யார்? ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தல்!!

உத்தரகாண்ட கோவா மாநில சட்டமன்றங்களுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தரகாண்ட், கோவா தேர்தலில் மகுடம் சூட்டப்போவது யார்?  ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தல்!!

உத்தரகாண்டில்  புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜக ஆட்சி  நடந்து வருகிறது. பாஜகவின்  பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில்  மொத்தமுள்ள 70  தொகுதிகளுக்கு  நாளை  ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் பாஜகவும் மும்முரமாக களப்பணியாற்றி  வருகின்றன. கடந்த 10  நாட்களுக்கு மேலாக இங்கு அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர். மோடி ராகுல் அமித்ஷா பிரியங்கா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இம்மாநிலத்தில் முகாமிட்டு தங்கள் வாக்குறுதிகளை சொல்லி மக்களிடம்  வாக்கு சேகரித்தனர். 

கோவா மாநிலத்தில் உள்ள 40  தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான  பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இரண்டு முறை பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் இந்த முறை எப்படியாவது கோவா மாநிலத்தை வென்றெடுக்கும் முனைப்பில்  களப்பணியாற்றி  வருகிறது.

இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் நாளை இரண்டாம் கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள  55 தொகுதிகளுக்கு  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான  முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.